fbpx

ஓடும் பேருந்தில் சொந்த அண்ணியை கழுத்தறுத்து கொலை! கணவரின் சகோதரர் அதிரடிக்கை கைது!

திண்டுக்கல் மாவட்டத்தில் சொத்து தகராறு காரணமாக தம்பியின் மனைவியை ஓடும் பேருந்தில் வைத்து அண்ணன் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே உள்ள கணவாய் பட்டி பங்களாவை சார்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் கோபி இவரது மனைவி தமயந்தி. கோபிக்கும் அவரது அண்ணன் ராஜாங்கத்திற்கும் இடையே சொத்து தகராறு நீண்ட நாட்களாக இருந்து வந்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து இருவரும் இந்த வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில் சொத்து வழக்கு சம்பந்தமாக திண்டுக்கல் சென்று தங்களது வழக்கறிஞரை சந்தித்து வந்திருக்கிறார் கோபியின் மனைவி தமயந்தி.

அப்போது திண்டுக்கல் செல்லும் தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஏறிய கோபியின் அண்ணன் ராஜாங்கம் தமயந்தியை சரா மாறியாக அறிவாலால் வெட்டியுள்ளார் இதில் படுகாயம் அடைந்த தமயந்தி பரிதாபமாக உயிரிழந்தார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தப்பியோடிய ராஜாங்கத்தை கொலை நடந்த 20 மணி நேரத்திற்குள் கைது செய்தது திண்டுக்கல் போலீஸ். பட்டப் பகலில் ஓடும் பேருந்தில் வைத்து நடைபெற்ற இந்த துணிகர சம்பவம் அப்போது உள்ள மக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. தற்காலங்களில் கொலை போன்ற ஈவு இரக்கமற்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகுந்த வேதனை அளிப்பதாக இருக்கிறது . அண்ணன் தம்பி இடையேயான சொத்து தகராறு மரணத்தில் சென்று முடிந்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சடைய செய்திருக்கிறது .

Rupa

Next Post

விடுதலை பட பாணியில் காவல் நிலையம் மீது தாக்குதல்! லாக்கப்பை உடைத்து கைதிகள் மீட்பு!

Sat Apr 8 , 2023
‌ மத்திய பிரதேசம் மாநிலத்தில் கும்பல் ஒன்று காவல் நிலையத்திற்குள் புகுந்து காவலர்களை தாக்கி விட்டு சிறையிலிருந்த மூன்று கைதிகளை அழைத்துச் சென்ற விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் புர்கா மாவட்டத்தில் உள்ள நேபா நகரில் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய அந்த கும்பல் அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளை விடுதலை செய்து மூன்று பேரை அழைத்துச் சென்றது. இது தொடர்பான சிசிடிவி […]

You May Like