பொதுவாக தற்போது பெண் பிள்ளைகளுக்கு சமூகத்தில் பாதுகாப்பு என்ற உணர்வே இல்லாமல் போய்விட்டது. பெண் பிள்ளைகள் கல்லூரியில் படித்தாலும் சரி பள்ளியில் படித்தாலும் சரி அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டியவர்களே அவர்களுக்கு எதிராக, பாலியல் உள்ளிட்ட சீண்டலில் ஈடுபடுவது வருத்தத்திற்குரிய செய்தியாக இருக்கிறது.
அந்த வகையில், விழுப்புரம் பகுதியில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. விழுப்புரத்தில் பள்ளி ஆசிரியரே 13 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் அருகே, ஒரு அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில், ஒன்று முதல், பத்தாம் வகுப்பு வரையில், சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் தான், கடந்த 14ஆம் தேதி அதே பள்ளியில் படிக்கும் 13 வயது சிறுமி ஒருவர், இசை வகுப்பிற்காக சென்றுள்ளார். அப்போது வகுப்பில் இருந்த இசை ஆசிரியர் சங்கராபரணம் அந்த மாணவியிடம் பாலியல் தொல்லை வழங்கும் விதமாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இதனால், பயந்து போன சிறுமி அழுது கொண்டே வகுப்பில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு இந்த சம்பவம் குறித்து தன்னுடன் படிக்கும் மாணவர்களிடம் அவர் கூறியுள்ளார்.
இதன் பிறகு பள்ளி முடிவடைந்து வீட்டிற்கு வந்த மாணவி, சோர்வுடன் காணப்பட்டிருக்கிறார். இது பற்றி அந்த மாணவியிடம் தன்னுடைய தாயார் கேள்வி எழுப்பியபோது ஆசிரியர் தன்னிடம் நடந்து கொண்ட விதத்தை பற்றி, கூறி, கதறி அழுதுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் தாயார், உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் புகார் வழங்கியிருக்கிறார்.
அதோடு, இந்த சம்பவம் தொடர்பாக, குழந்தைகள் நல அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் நடத்திய விசாரணையில், ஆசிரியர் மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டது உண்மைதான் என்பது தெரிய வந்தது. ஆகவே அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, இசை ஆசிரியர் சங்கராபரணம் மீது, காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய முயற்சி செய்தனர். ஆனால் திடீரென்று அவர் தலைமறைவாகி விட்டார். அதோடு, இந்த விவகாரத்தில் சிக்கிய சங்கராபரணத்தை பணியில் பணியிலிருந்து இடைநீக்கம் செய்தது பள்ளி நிர்வாகம்.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் ஆசிரியர் சங்கராபரணத்தை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.