சென்னை மயிலாப்பூர் பகுதியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் பிரபலமான நட்சத்திர ஹோட்டல் ஒன்று இருக்கிறது. இந்த ஹோட்டலில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருபவர் பெரம்பூர் கூக்ஸ் சாலை ஹைதர் கார்டன் பிரதான தெருவை சேர்ந்த அபிஷேக்(28).
இவர் நேற்று மதியம் பொருட்களை எடுத்து செல்வதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த லிப்ட்டில் ட்ராலியின் பொருட்களை எடுத்துக்கொண்டு 11வது மாறி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய கவன குறைவால் 2 மாடிகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டுள்ளார் உடனடியாக இது தொடர்பாக தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் வழங்கப்பட்டது.
அதன் பேரில் எழும்பூர் மயிலாப்பூர் பகுதியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் 2️ மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அபிஷேக்கை பிணமாக மீட்டனர். மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதோடு இந்த விபத்து தொடர்பாக ராயப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையாக அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்த போது, கதவு மூடப்படாமல் இருந்ததாலேயே அபிஷேக் தவறி விழுந்து நசுங்கி உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.