திருச்சி மாவட்ட பகுதியில் உள்ள, அய்யம்பாளையத்தில் சண்முகம் என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளை ஒன்றில் பிரபு எனபவர் வேலை செய்து வந்துள்ளார்.
அதே செங்கல் சூளையில் கணவரை இழந்த ரேகா என்ற பெண் வேலை செய்து வந்துள்ளார். ரேக்காவுக்கு முதல் கணவரிடமிருந்து மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 8 ஆண்டுகளாக பிரபு, ரேகா இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தனது மகன் பிரபு காணாமல் போனதாக அவரது தந்தை ஆறுமுகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் ரேகா மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் கூறியுள்ளார். அதன்பின், போலீசார் ரேகாவை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது ரேகாவின் இரண்டாவது கணவர் பிரபு, ரேகாவின் மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ரேகா கண்டித்தும் கேட்காததால், ஆத்திரமடைந்த ரேகா, அரிவாளால் பிரபுவின் தலையில் வெட்டி கொலை செய்துள்ளார்.
கடந்த செப்டம்பரில் காவிரி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட சடலம் பிரபுவின் சடலம் என தெரியவந்ததை அடுத்து ரேகா கைது செய்யப்பட்டார். அவர் இறக்கும் போது அந்த நபர் அடையாளம் காணப்படவில்லை என உடலை அடக்கம் செய்துவிட்டனர். ஆனால் தற்போது, அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, ரேகா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.