மலேசியா நாட்டில் சுங்கை பூலோவில் வடக்கு மற்றும் தெற்கு விரைவுச் சாலைக்கு அருகில் வழிப்போக்கர் ஒருவர் அதிர்ச்சியூட்டும் வகையில் கிடக்கும் சூட்கேஸ் ஒன்றை பார்த்துள்ளார்.
அதில் துண்டிக்கப்பட்ட நிலையில் தலை, கை, கால்கள் போன்ற மனித உடல் உறுப்புகள் இருந்தது அந்த வழிப்போக்கருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துண்டிக்கப்பட்ட நபர் யார் என்ற தகவல்கள் தெரியாத நிலையில், சம்பவ இடத்திலிருந்து காலை 11.45 மணி அளவில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில், சூட்கேஸில் இருந்து கைப்பற்றப்பட்ட மனித உடல் பாகங்களை சுங்கை பகுதி மருத்துவமனைக்கு அனுப்பியதாக துணைத் தலைவரான ஷஃபாடன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவரை பற்றி எந்த ஆவணங்களிம் கிடைக்கவில்லை என்றும், குற்றவியல் சட்டத்தின் பிரிவின் கீழ் இந்த வழக்கை கொலை என்று பதிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். இதனிடையில் உயிரிழந்துள்ள நபர் வெளிநாட்டை சேர்ந்தவர் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.
பிரேத பரிசோதனையில் அந்த நபருக்கு கூரிய ஆயுதத்தால் காயங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரியவந்ததுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை கண்டறிய தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.