கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரான சிவராமன், தனக்கு தற்கொலை கடிதம் அனுப்பியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில், கடந்த 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை என்சிசி முகாம் நடைபெற்றது. அதில், 17 மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்ற 8ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியை பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான சிவராமன் (35) பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும் 13 மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பயிற்சியாளர் சிவராமன் உள்பட 11 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்., இச்சம்பவத்தில் கைதான போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன் உயிரிழந்தார். வழக்கில் தலைமறைவாக இருந்தபோது எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை முயன்ற நிலையில், அவர் கைது செய்யப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து, சிவராமனின் தந்தை அசோக்குமார், குடிபோதையில் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த இரு மரணங்களில் சந்தேகம் இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மற்று எடப்பாடி பழனிச்சாமி கூறி வந்தனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான சிவராமன், தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனக்கு கடிதம் எழுதியிருந்தார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் இதுகுறித்து விரிவாக பேசிய அவர், “வருத்தம் தெரிவித்து சிவராமன் எனக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகக் கூறியிருந்தார். சிவராமனைக் காவல்துறையில் பிடித்துக் கொடுத்ததே நாம் தமிழர் கட்சியினர்தான். குற்ற உணர்வால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதில் சந்தேகமில்லை” என்றார்.
Read more ; போலி NCC முகாம்.. பின்னணியில் இருப்பது யார்? குற்றவாளிகளை காக்க முயற்சி செய்வது ஏன்? – EPS கேள்வி