fbpx

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையாகி நளினி வெளியே வந்தார்…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 32 ஆண்டுகள் சிறையில் இருந்த நளினி உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து அவர் வேலூர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 1998ம் ஆண்டு 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இதில், படிப்படியாக 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 7 பேரும் தூக்கு தண்டனை கைதிகளாக இருந்தனர். அவர்களின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது.
32 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த பேரறிவாளன் கடந்த மே 18ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து நளினி உள்பட மற்றவர்களும் தங்களை விடுதலை செய்ய கோரிக்கை விடுத்து இருந்தனர். இதுதொடர்பாக நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த மனு நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டு அமர்வு முன்பு நேற்று விசாரணை நடந்து வந்தது.

இதன் முடிவில், நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 6 பேரையும் ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்து நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்தினம் ஆகியோர் அதிரடியாக உத்தரவிட்டனர். இந்நிலையில், பரோலில் உள்ள நளினி விடுதலை தொடர்பான உத்தரவு நகல் இன்னும் கிடைக்கவில்லை என்பதால் இன்று விடுதலையாக வாய்ப்பு இல்லை என்று வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் தகவல் தெரிவித்திருந்த நிலையில் கைக்கு நகல் கிடைத்ததால் விடுதலை ஆனார்.

Next Post

ஒரு மணி நேரம் ’பிரதமரும் நானும் என்ன பேசினோம்… மாநில பா.ஜ.க. தலைவர் விளக்கம்…

Sat Nov 12 , 2022
நேற்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தபோது ஒரு மணி நேரம் என்ன பேசினோம் என்பதை பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு அளித்தனர். மாநிலத் தலைவர் என்ற முறையில் காரில் பயணித்த அண்ணாமலை தன்னுடன் மோடி என்ன பேசினார் என்பதை பகிர்ந்துகொண்டுள்ளார். மாநிலத் தலைவர் என்ற முறையில் என்னை வாகனத்தில் […]
பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறாரா அண்ணாமலை..? புதிய தலைவர் இவர்தானாம்..!!

You May Like