fbpx

ஆன்லைன் மூலம் வணிகம் செய்யும் வசதி… புதிய இணையதளத்தை தொடங்கிய மத்திய அரசு…‌‌

தேசிய சிறுதொழில் கழகம், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழுள்ள பொதுத்துறை நிறுவனமான சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான இணையவழி பக்கம், நாட்டிலுள்ள சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் செய்வோரின் வணிகத்தை மேம்படுத்த, மின்சந்தைப்படுத்துதல் சேவையை எளிதாக்குகிறது. இணையவழி பதிவு, இணையவழி அங்காடி மேலாண்மை, காட்சிப்படுத்தப்படும் பொருள்கள், சேவைகள், வணிக வர்த்தகத் தகவல்கள், ஒப்பந்த தகவல்கள் அளித்தல் போன்றவை இணைய பக்கத்தின் முக்கிய சேவைகளாகும்.

மேலும், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் ஒரு அதிகாரப்பூர்வ அமைப்பாகும். இந்த அமைச்சகத்தின்கீழ், ‘ekhadiindia.com’ இந்த என்ற இணைய பக்கத்தை நிறுவியது. இது, அதன் பங்கேற்பாளர்களுக்கு, இணைய வழி சந்தைப்படுத்துதலை எளிதாக்குகிறது. இந்த இணைய பக்கம், குறு நிறுவனங்களுக்கான புதிய வழிகளை காட்டுகிறது. மேலும், அதன் வாடிக்கையாளர்கள் பல்வேறு வழிமுறைகளில் தொடர்வதை அனுமதிக்கிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையை மேம்படுத்துவதற்காக, பிரதமரின் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டம், பாரம்பரிய தொழில்களை மறுசீரமைப்பதற்கான நிதியுதவி திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

Vignesh

Next Post

இடைவிடாத கனமழை.. இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை...

Fri Aug 5 , 2022
தொடர் மழை காரணமாக நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.. இந்த சூழலில் தமிழகத்தில் நிலவும் மேல் வளிமண்டல சுழற்சி காரணமாக: இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் […]

You May Like