fbpx

தேசிய உலோகவியலாளர் விருதுக்கு அடுத்த மாதம் 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்….!

தேசிய உலோகவியலாளர் விருது திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது,

தேசிய உலோகவியலாளர் விருது 2022–ஐ வழங்க எஃகு துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 11.10.2022. விண்ணப்பங்களை https://awards.steel.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் . இரும்பு மற்றும் எஃகு துறையில் உற்பத்தி, ஆராய்ச்சி, வடிவமைப்பு, கல்வி, கழிவு மேலாண்மை, எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்பு செய்த உலோகவியலாளர்களை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படுகிறது.

தற்சார்பு இந்தியா இயக்கத்தின் நோக்கங்களை அடையும் வகையில் சிறப்பான முறையில் இத்துறையில் பங்களிப்பு செய்தவர்களுக்கும் இவ்விருது அளிக்கப்படுகிறது. விண்ணப்பங்களை நிறுவனங்களோ / அமைப்புகளோ அல்லது பொதுமக்களோ சமர்ப்பிக்கலாம். ஆண்டு தோறும் பிப்ரவரி 3-ம் நாள் தேசிய உலோவியலாளர் விருது வழங்கப்படுகிறது.

வாழ்நாள் சாதனையாளர் விருது, தேசிய உலோகவியலாளர் விருது, இளைய உலோகவியலாளர் (சுற்றுச்சூழல் அறிவியல்), இளைய உலோகவியலாளர் (உலோக அறிவியல்), இரும்பு மற்றும் எஃகு துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான விருது என ஐந்து விருதுகள் வழங்கப்படுகிறது.

Vignesh

Next Post

BEL நிறுவனத்தில் ரூ.40,000 ஊதியத்தில் வேலை...! நாளை மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்...!

Tue Sep 13 , 2022
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னையில் உள்ள அலுவலகங்களில் Project Engineers – I பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு என மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E.., B.Tech தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்களுக்கு […]

You May Like