பலருக்கு உள்ளங்கால் விறைத்து போகும் நிலை ஏற்படுவதுண்டு. மேலும் கால் வீக்கம் அதிகரிக்கலாம். அப்படி அதிகரித்தால், அவர்கள் அதிலிருந்து விடுபட பல்வேறு மருத்துவர்களை நாடுவார்கள். ஆனாலும் அந்த வீக்கம் அவ்வளவு எளிதில் குணமாகாது.
நாம் அன்றாட வேலைகளை செய்வதிலேயே இதன் காரணமாக, பல்வேறு சிக்கல்கள் எழலாம். அந்த வீக்கத்திற்கு காரணம் என்னவென்றால், உடலில் யூரிக் அமிலம் அதிகமாக இருப்பது தான் அந்த வீக்கத்திற்கு காரணமாக கூறப்படுகிறது
தற்போது அந்த யூரிக் அமிலத்தை சுலபமாக எப்படி குறைக்கலாம் என்பதை நாம் காண்போம். மருத்துவர்களின் கூற்றுப்படி தற்போது இரண்டு பேரில் ஒருவருக்கு, யூரிக் அமில சுரப்பு அதிகமாக இருப்பதாக சில புள்ளி விவரங்கள் கூறுகின்றனர். இந்த பிரச்சனையை சரியான சமயத்தில் சிகிச்சையின் மூலமாக குணப்படுத்தாவிட்டால், அது ஒரு தீவிர பிரச்சனையாக மாறி, பல்வேறு சிக்கல்களை உண்டாக்கிவிடும்.
இந்த யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துவதற்கு ஒரு கிளாஸ் நீரில் அரை டீஸ்பூன் பேக்கிங் சோடாவை கலந்து பருகலாம். உடலில் யூரிக் அமிலத்தின் அளவை குறைப்பதற்கு, நாள்தோறும் சாப்பிடும் உணவில் விட்டமின் சி சத்து நிறைந்த காய்கறிகளை சேர்த்துக் கொள்வது நல்லது.
அதேபோல ஒருவர் அதிக அளவிலான தண்ணீர் குடிப்பது என்பது உடலில் பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும். அதிலும், இந்த தண்ணீரை அதிகமாக குடிப்பதால் உடலில் இருந்து சிறுநீர் மூலமாக யூரிக் அமிலம் வெளியேற வாய்ப்பு இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
நார்சத்து அதிகமாக இருக்கின்ற உணவுகளை சாப்பிடுவது ரத்தத்திலிருந்து யூரிக் அமிலத்தை உறிஞ்சுதல் மூலமாக சிறுநீரகங்கள் வழியே வெளியேற்ற உதவுகிறது. சமையலில் வெண்ணெய் அல்லது தாவர எண்ணெய்க்கு மாற்றாக ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்துவது மிகவும் நல்லது என்று சொல்லப்படுகிறது.
இந்த யூரிக் அமிலத்தை குறைப்பதற்கு ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலங்களை தவிர்ப்பது நல்லது. இந்த கொழுப்பு அமிலங்கள் மீன் மற்றும் அதன் எண்ணெய்களில் காணப்படுகிறது.