சீக்கிய, ஜெயின், முஸ்லிம், கிறிஸ்தவ, பௌத்த மற்றும் பார்சி ஆகிய ஆறு அறிவிக்கப்பட்ட சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை படிப்புகளில் சேருவதற்கான தகுதித் தேர்வுகளை எழுதவும் குரூப் ஏ, ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவுகளில் போட்டித் தேர்வுகளை எழுதவும் சிறப்பு பயிற்சி மூலம் உதவுவதற்காக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் ‘நயா சவேரா’ திட்டத்தை (‘இலவச பயிற்சி மற்றும் தொடர்புடைய’ திட்டம்) மத்திய அரசு செயல்படுத்தி வந்தது.
இத்திட்டம் நாடு முழுவதும் திட்ட அமலாக்க முகமைகள் மூலம் செயல்படுத்தப்பட்டது. நயா சவேரா திட்டத்தின் கீழ் 1,19,223 சிறுபான்மை மாணவர்கள் மற்றும் தேர்வர்கள் பயனடைந்துள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்த சிறுபான்மையினரின் மாநில வாரியான விவரங்கள் www.minorityaffairs.gov.in அமைச்சகத்தின் இணையதளத்தில் உள்ளன. இத்திட்டத்தின் கீழ் பயிற்சிக் காலம் 3 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை பயிற்சித் திட்டத்தைப் பொறுத்து இருந்தது. இத்திட்டம் 2022-23 நிதி ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ளது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.