நடிகை நயன்தாரா இரட்டை குழந்தைகளுக்கு தயானாதிலிருந்து படு பிசியாக இருந்து வரும் நிலையில் தற்போது ஒரு வருடத்திற்கு திரைப்படங்கள் நடிக்கப்போவதில்லை என்று முடிவு எடுத்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி இருவரும் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் பெற்றோராகிவிட்டதாக தெரிவித்தனர். 4 மாதத்தில் எப்படி குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என ரசிகர்கள்கேள்வி எழுப்பிய நிலையில் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டதாக அவர்கள் விளக்கமளித்தனர்.
இந்நிலையில் அதுவும் சர்ச்சையானது. சட்ட திட்டங்களுக்குட்படவில்லை எனவும் இது குறித்த விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்திருந்த நிலையில் ஏற்கனவே திருமணமாகிவிட்டதாகவும் அனைத்து சட்டத்திட்டங்களையும் மதித்தே குழந்தை பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இதனிடையே இவர் நடித்த ’கனெக்ட்’ திரைப்படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி வருகின்றது. பல திரைப்படங்கள் தன் கையில் வைத்திருப்பதாக நயன்தாரா ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் குழந்தைகளை கவனித்துக்கொள்வதில் படு பிசியாக இருக்கின்றாராம். உதவியாட்கள் 3 பேரை வைத்துள்ளபோதிலும் அவரே குழந்தையை பார்த்துக் கொள்கின்றாராம். எனவே அவர் திரைப்படங்கள் நடிப்பதில் இருந்து ஒரு வருடம் பிரேக் எடுத்துக்கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.