fbpx

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு… குற்றவாளிகள் அரசு மாளிகையில் தங்கி இருந்தார்களா…?

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாட்னாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்ததாக வெளியான செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்தது மாணவர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதேபோல் அண்மையில் நடைபெற்ற நெட் தேர்விலும் வினாத்தாள் கசிந்து முறைகேடு நடைபெற்றதாகத் தெரிய வந்தது. இதையடுத்து அந்தத் தேர்வை மத்திய கல்வி அமைச்சகம் ரத்து செய்தது. நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாட்னாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்ததாக வெளியான செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய தேர்வுத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாட்னாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்ததாக சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. பாட்னாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு விருந்தினர் மாளிகை வசதி இல்லை என்பதை என்.எச்.ஏ.ஐ தெளிவுபடுத்த விரும்புகிறது. அதன்படி, ஊடகங்கள் இதைக் கவனத்தில் கொண்டு, ஏற்கனவே வெளியிடப்பட்ட தவறான செய்தி அறிக்கையில் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

NEET exam question paper leak… Did the criminals stay in the government house?

Vignesh

Next Post

ஐஜிஎஸ்டி வரி விலக்கை 2029 ஜூன் 30 வரை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க பரிந்துரை....!

Sun Jun 23 , 2024
Recommendation to extend IGST tax exemption for another five years till 30 June 2029

You May Like