fbpx

எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க பாருங்க…..? நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த கும்பலை சுற்றி வளைத்த டெல்லி காவல்துறை…..! அய்யய்யோ அவரும் கைது செய்யப்பட்டாரா…..?

நீட் தேர்வு எழுதுவதில் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட மோசடி கொம்பளை டெல்லி காவல்துறை அதிரடியாக கைது செய்திருக்கிறது. இந்த மோசடி வழக்கு குறித்து எய்ம்ஸ் மருத்துவ மாணவர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு சென்ற மே மாதம் 7ம் தேதி நடந்தது சரியாக 499 நகரங்களில் நடந்த இந்த தேர்தலில் 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றுக் கொண்டனர்.

இந்த தேர்வு முறைகேடுகளை தடுப்பதற்காக பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக தேசிய தேர்வு முகமை கூறி இருந்தது. பல கட்ட சோதனைக்கு பின்னர்தான் தேர்வு அறைக்குள் மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டதாகவும் தேசிய தேர்வு முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழ்நிலையில்தான் நீட் நுழைவுத் தேர்வில் ஆள் மாறாட்ட மோசடிகள் நடந்துள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளது. ஆள் மாறாட்டம் செய்த மோசடி கும்பலை டெல்லி காவல்துறையினர் அதிரடியாக கைது செய்திருக்கின்றனர். நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கு பதிலாக வேறு நபர்களை தேர்வு எழுத ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்ற விவரமும் தற்போது தெரிய வந்திருக்கிறது.

இந்த நீட் தேர்வில் முறைகேடுகளும் மோசடிகளும் நடப்பது இது முதல் முறை அல்ல. தமிழகத்தில் கடந்த 2019 மற்றும் 2020ம் வருடத்தில் நீட் தேர்வில் 10 மாணவர்கள் ஆழ் மாறாட்டம் செய்தனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு டெல்லியிலும் ஜார்கண்ட் மாநிலத்திலும் ஆள் மாறாட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் நீட் தேர்வு ஆன்மாறாட்ட மோசடிகள் நடைபெற்றது தெரிய வந்தது.

Next Post

’எனக்கு திருட கூட தெரியல’..!! திருட சென்ற இடத்தில் சிக்கிக்கொண்டதால் தூக்கில் தொங்க முயன்ற நபர்..!!

Tue Jul 4 , 2023
திருப்பூரில் திருட சென்ற இடத்தில் தூக்கில் தொங்க முயற்சித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் திம்மநாயக்கன் பாளையம், சிவசக்தி நகரை சேர்ந்தவர் வடிவேலு. இவர் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பும்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், வீட்டிற்குள் திருடன் இருப்பதை அறிந்துக்கொண்ட அவர், வீட்டின் கதவை பூட்டிவிட்டு காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். இந்நிலையில், செய்வதறியாது திகைத்த திருடன் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். முயற்சிகள் தோல்வியடைந்த […]
’எனக்கு திருட கூட தெரியல’..!! திருட சென்ற இடத்தில் சிக்கிக்கொண்டதால் தூக்கில் தொங்க முயன்ற நபர்..!!

You May Like