fbpx

இன்று நீட் தேர்வு நடைபெறாது…! இந்த மாநிலத்தில் மட்டும்… தேதி பின்னர் அறிவிக்கப்படும்…! மத்திய அமைச்சர் அறிவிப்பு…!

மணிப்பூர் மாநிலத்தில் மட்டும் இன்று நீட் தேர்வு நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

2023-24-ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 490-க்கும் மேற்பட்ட நகரங்களில் இன்று மதியம் 2 மணிமுதல் 5.20 மணி வரை நேரடி முறையில் நடைபெற உள்ளது. தேர்வுக்கு 11.84 லட்சம் மாணவிகள், 9.03 லட்சம் மாணவர்கள், 13 திருநங்கைகள் என மொத்தம் 20.87 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் மட்டும் நீட் தேர்வு நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் வன்முறை காரணமாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்போதுள்ள சூழலில் மாணவர்களால் நீட் தேர்வில் கலந்து கொள்ள முடியாது என்றும் தேர்வுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மத்திய கல்வி இணை அமைச்சர் டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

விண்ணப்பித்த 7 நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு..!! 6 மணி நேரத்திற்கு மேல் மின்தடை கிடையாது..!!

Sun May 7 , 2023
தமிழ்நாட்டில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்விநியோக விதிகளில் அடிக்கடி பல புதிய திருத்தங்களை செய்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் ஆரம்பத்தில் இருந்து புதிய மின் இணைப்பிற்கு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த 7 நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. 7 நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு கொடுக்காத […]
புதுசா வீடு வாங்கப் போறீங்களா..? மின் இணைப்பு குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்..!!

You May Like