fbpx

2024-ம் ஆண்டுக்கான நீட் UG, PG கலந்தாய்வு அட்டவணை…! எப்பொழுது வெளியாகும்…?

2024-ம் ஆண்டிற்கான நீட், இளநிலை மற்றும் முதுநிலைக் கலந்தாய்வு அட்டவணையை சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் கீழ் உள்ள மருத்துவக் கலந்தாய்வுக் குழு இன்னும் அறிவிக்கவில்லை.

நீட், இளநிலை மற்றும் முதுநிலைக் கலந்தாய்வு அட்டவணை தொடர்பாக, மருத்துவக் கலந்தாய்வுக் குழு , தனது இணையதளத்தில் தேர்வு செயல்முறை முடிந்து தேசிய மருத்துவ ஆணையம் சீட் மேட்ரிக்ஸை (கல்வி நிலையங்களில் உள்ள இடங்களின் எண்ணிக்கையை) இறுதி செய்ததன் அடிப்படையில் அறிவித்துள்ளது. 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இளநிலை இடங்களுக்கான கலந்தாய்வு முறையே 19.1.2022, 11.10.2022 மற்றும் 20.7.2023 ஆகிய தேதிகளில் தொடங்கியது. 2024-ம் ஆண்டிற்கு, ஜூன் கடைசி வாரத்தில் இளநிலை மற்றும் முதுநிலை இடங்களுக்கான சீட் மேட்ரிக்ஸை இறுதி செய்வதற்கான அட்டவணையை தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

இது இளநிலை சீட் மேட்ரிக்ஸை ஜூலை மூன்றாவது வாரத்திலும், முதுநிலை சீட் மேட்ரிக்ஸை ஆகஸ்ட் நடுப்பகுதியிலும் இறுதி செய்யும் என்பதைக் குறிக்கிறது. அதன்படிக் கலந்தாய்வு அட்டவணை அறிவிக்கப்படும். எனவே, 2024-ம் ஆண்டுக்கான கலந்தாய்வு அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

English Summary

NEET UG, PG Counseling Schedule 2024

Vignesh

Next Post

ரேஷன் கார்டு இருந்தால் போதும் ரூ. 10 லட்சம் வரை கடன்!! மாநில அரசின் அசத்தலான அறிவிப்பு!!

Mon Jul 8 , 2024
Ration card holders are given a bank loan of up to 10 lakh rupees. Here you can see how to buy it.

You May Like