fbpx

நெல்லை அருகே பாலருவி விரைவு ரயில் தடம்புரண்டதால் பரபரப்பு…. பயணிகள் இல்லாததால் பாதிப்பு தவிர்ப்பு…..

நெல்லை அருகே பாலருவி விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்ட நிலையில் பயணம் யாரும் இல்லாததால் பெரும் பாதிப்புதவிர்க்கப்பட்டுள்ளது.

நெல்லையில் இருந்து பலக்காடுவரை செல்லும் பாலக்காடு விரைவு ரயில் இரு மார்க்கமாக இயக்கப்படுகின்றது. இன்று அதிகாலை பாலக்காட்டிலிருந்து பயணிகளுடன் நெல்லைக்கு பாலருவி விரைவு ரயில் 4.20 மணி அளவில் வந்தது. பின்னர் பயணிகளை இறக்கி விட்டு பராமரிப்பு பணிக்காக பணிமனைக்கு ஓட்டிச் செல்லப்பட்டது. ரயில் பரமரிப்பு பணி நடைபெறும் பணிமனையின் 3வது தண்டவாளத்தில் ரயில் வந்து கொண்டிருந்தது. சுமார் 5.30 மணி அளவில் திடீரென எஸ் 3 என்ற பெட்டி தண்டவாளத்தில் இருந்து புரண்டது.

இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி ரயில் சென்றது. உடனடியாக பிரேக் பிடித்தும் சில மீட்டர் தூரம் சென்று தடம் புரண்டு நின்றது. உடனடியாக லோகோ பைலட் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக வந்த அதிகாரிகள் தண்டவாளத்தை சீர் செய்யும் நடவடிக்கை மேற்கொண்டனர். ரயில்வே அதிகாரிகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மதுரையில்இருந்து வந்த அதிகாரிகள் விபத்து நடந்தது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

Next Post

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கு..! மூத்த பத்திரிகையாளர் திடீர் கைது..!

Sun Sep 11 , 2022
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன், கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் தொடர்பாக தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்தார். வழக்கு நடைபெற்று வரும் நிலையில், மாணவி எழுதிய கடிதத்தில் உள்ள கையெழுத்து அவருடையது இல்லை என்பதை தடயவியல் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியிருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தார். மேலும், இந்த சம்பவம் குறித்து முகநூல் மற்றும் […]
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கு..! மூத்த பத்திரிகையாளர் திடீர் கைது..!

You May Like