fbpx

ஆரணியில் காட்டன் சூதாட்டம்! தப்பி ஓடிய திமுக பிரமுகர்! சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறை!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த ஆரணியில் காட்டன் சூதாட்டம் மற்றும் ஆன்லைன் சூதாட்டத்தில் சூதாட்டத்தை நடத்தி வந்த திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தின் ஆரணி பகுதியில் காட்டன் சூதாட்டம் மற்றும் ஆன்லைன் சூதாட்டம் நடப்பதாக காவல்துறைக்கு வந்த தகவலைத் தொடர்ந்து அப்பகுதியில் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஆரணி அஞ்சல் நிலையம் அருகே காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கும்பலை காவல்துறையினர் சுற்றி வலைத்தனர். அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட பலரும் தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் காவல்துறையின் பிடியில் சிக்கினார்..

அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் ஆரணி எஸ் பி கோயில் தெருவில் வசித்து வரும் நிலவழகன் என்ற செந்தில்குமார் என்பது தெரிய வந்தது. ஆரணி பகுதி பேரூர் திமுகவின் துணைச் செயலாளராக பதவி வைத்து வருகிறார். இவரது மனைவி ஆரணி பேரூராட்சியின் 13 வது வார்டு கவுன்சிலராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இவரிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகிறது காவல்துறை. மேலும் காட்டன் சூதாட்டம் என்பது மூன்று எண்களை வைத்து விளையாடப்படும் லாட்டரி சீட்டு போன்ற விளையாட்டாகும். அன்றாடம் தின கூலிக்கு வேலை செய்யும் நபர்களும் இந்தக் காட்டன் சூதாட்டத்தின் மூலம் ஏராளமான பணத்தை இழந்து வருகின்றனர். லாட்டரி சீட்டுகள் தற்போது தமிழகமெங்கும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இது போன்ற புதிய சூதாட்டம் தலைத்தூக்கி உள்ளது.

Rupa

Next Post

திருடிய நகைகளை உருக்கி சொகுசு வாழ்க்கை..!! 9 கிலோ கொள்ளைபோன வழக்கில் திடுக்கிடும் தகவல்..!!

Tue Mar 21 , 2023
சென்னை பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்குச் சொந்தமான நகைக்கடையின் ஷட்டரில் வெல்டிங் மெஷினால் துளையிட்டு உள்ளே ஒரு கும்பல் நுழைந்துள்ளது. பின்னர் கடையின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.6 கோடி மதிப்புள்ள 9 கிலோ தங்க நகைகள், ரூ.20 லட்சம் மதிப்பிலான வைரங்களை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். மேலும், கடையிலிருந்த கண்காணிப்பு கேமராவின் ஹார்டு டிஸ்க்கும் திருடப்பட்டிருந்தது. இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை […]
திருடிய நகைகளை உருக்கி சொகுசு வாழ்க்கை..!! 9 கிலோ கொள்ளைபோன வழக்கில் திடுக்கிடும் தகவல்..!!

You May Like