fbpx

“இனி 38 இல்ல 45..”! தமிழகத்தில் வர இருக்கும் 7 புதிய மாவட்டங்கள்.! விரைவில் அறிவிப்பை வெளியிடும் முதல்வர்.?

தமிழ்நாட்டில் புதிதாக 7 மாவட்டங்கள் உருவாக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ளன. 1956 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலமாக உருவாக்கப்பட்ட போது 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்தது. அதன் பிறகு நிர்வாக சீரமைப்பிற்காக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன.

கடந்த அதிமுக ஆட்சியில் 6 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. தென்காசி கள்ளக்குறிச்சி செங்கல்பட்டு திருப்பத்தூர் ராணிப்பேட்டை ஆகியவை புதிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டது. மேலும் மக்கள் தொகை அதிகமாக உள்ள மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.

இந்நிலையில் தமிழகத்தில் புதியதாக 7 மாவட்டங்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாவட்டங்கள் தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய மாவட்டங்களுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் விரைவிலேயே இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என அரசுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Next Post

’ஹாலிவுட் லெவல்’..!! கேப்டன் மில்லர் படம் எப்படி இருக்கு..? ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!!

Fri Jan 12 , 2024
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ராக்கி, சாணிக் காயிதம் திரைப்படங்கள் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். இவர் இயக்கத்தில் உருவான கேப்டன் மில்லர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் கதா நாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். முக்கிய கதாப்பாத்திரத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் […]

You May Like