New Aadhaar Rules: அக்டோபர் 1 ஆம் தேதி முதல் , வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய அல்லது நிரந்தர கணக்கு எண்ணுக்கு (பான்) விண்ணப்பிப்பதற்கு ஆதார் பதிவு எண்ணைப் பயன்படுத்துவது இனி ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் இந்த வசதி நிறுத்தப்படவுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆதார் என்பது 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண்ணாகும், இது இந்தியாவில் வசிப்பவர்களுக்கு அடையாளச் சான்றாகவும் முகவரிச் சான்றாகவும் செயல்படுகிறது. ஆதார் பதிவு ஐடி (EID) என்பது ஒவ்வொரு ஆதார் விண்ணப்பதாரருக்கும் ஒதுக்கப்படும் 28 இலக்க தனிப்பட்ட அடையாள எண்ணாகும்.
2017-ஆம் ஆண்டு முதல், ஆதார் எண் இல்லாதவர்கள் பான் கார்டு விண்ணப்பிக்கும் போது அல்லது வருமான வரி தாக்கல் செய்யும் போது ஆதார் பதிவு எண்ணை பயன்படுத்தலாம் என்ற விதி இருந்தது. ஆனால், தற்போது இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு ஆதார் எண் இருப்பதால், ஆதார் பதிவு எண்ணை பயன்படுத்தும் வசதியை நீக்குவது அவசியம்.
ஏனெனில் போலியான பான் கார்டு பெற்று சிலர் ஐடிஆர் தாக்கல் செய்யது ஏமாற்ற முயற்சிக்கின்றனர். இந்த காரணத்தினால் தற்போது இந்த விதி கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் ஆதார் பதிவு எண்ணை வைத்து பான் கார்டு பெற விண்ணப்பித்தவர்கள், குறிப்பிட்ட தேதியில் தங்களுடைய ஆதார் நம்பர் வந்ததும், ஆதார் எண்ணை தெரிவிக்க வேண்டும்.
ஆதார் பதிவு ஐடியை எவ்வாறு கண்டுபிடிப்பது? UIDAI இணையதளத்தைப் பார்வையிடவும். “My Aadhaar” என்பதன் கீழ், உள்ள EID/UID-ஐக் கிளிக் செய்யவும். ஆதார் நம்பரை என்டர் செய்யவும். மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியுடன் விண்ணப்பத்தின்படி உங்கள் முழுப் பெயரை என்டர் செய்யவும். கேப்ட்சா குறியீட்டை என்டர் செய்து, “Send OTP” என்பதைக் கிளிக் செய்யவும். OTP-ஐ என்டர் செய்யவும். EID விவரங்கள் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும். இல்லையெனில், உங்கள் பதிவு ஐடியை மீட்டெடுக்க, UIDAI-இன் 1947என்ற ஹெல்ப்லைன் நம்பருக்கு அழைக்கலாம்.