இந்த டிஜிட்டல் யுகத்தில் UPI பணப் பரிவர்த்தனை அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. சிறிய பெட்டிக்கடைகள் தொடங்கி பெரிய மால்கள் வரை அனைத்து இடங்களிலுமே UPI முறையில் அனைவரும் பணம் செலுத்தி வருகின்றனர். இதனால் கையில் பணம் வைத்துக் கொண்டு தான் வெளியே செல்ல வேண்டும் என்ற அவசியம். ஆனால் UPI முறை பணப் பரிவர்த்தனையை எளிதாகவும், வசதியாகவும் மாற்றி உள்ளது.
இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒரு பரிவர்த்தனைக்கான UPI Lite வரம்பை தற்போதைய ரூ.500ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அதாவது இப்போது நீங்கள் பின் நம்பரை உள்ளிடாமல் ரூ.1,000 வரை பணம் செலுத்தலாம். முன்னதாக, இந்த வரம்பு ரூ.500 ஆக இருந்தது. மேலும், UPI லைட் வாலட் வரம்பை ரூ.2,000ல் இருந்து ரூ.5,000 ஆக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இந்த மாற்றங்களால், டிஜிட்டல் பணம் செலுத்துவது மேலும் எளிதாகும்.
UPI விதிகளில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது?
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) பரவலான பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், UPI பரிவர்த்தனை வரம்பு ரூ.5,000ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த மாற்றம் பெரிய பரிவர்த்தனைகளை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முன்னதாக, UPI Liteஐ ரூ.500 வரையிலான கட்டணங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். இந்தப் புதுப்பிப்பின் மூலம், UPI Lite ஆனது PIN ஐ உள்ளிடாமலேயே சிறிய பரிவர்த்தனைகளை செயல்படுத்துகிறது, இதனால் ஆன்லைன் பணம் செலுத்துவது மிகவும் வசதியானது.
UPI 123PAY வரம்பும் அதிகரிப்பு
ஒரு பரிவர்த்தனைக்கான UPI 123PAY வரம்பை இந்திய ரிசர்வ் வங்கி, 5,000 ரூபாயில் இருந்து 10,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது. மேலும், UPI Lite வாலட் வரம்பு ரூ.2,000ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, மேலும் ஒரு பரிவர்த்தனை வரம்பு ரூ.500ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
UPI லைட் நன்மைகள் என்ன?
UPI லைட் என்பது யூனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸின் இலகுவான பதிப்பாகும். பயனர்கள் பின் நம்பரை உள்ளிடாமல் UPI பரிவர்த்தனைகளைச் செய்ய அனுமதிக்கிறது. இந்த அம்சம் சிறிய பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது. முன்னதாக, இதுபோன்ற பரிவர்த்தனைகளுக்கான வரம்பு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.500 ஆக இருந்தது, ஆனால் ரிசர்வ் வங்கி தற்போது இந்த வரம்பை ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1,000 ஆக உயர்த்தியுள்ளது.
UPI லைட்டை உருவாக்குவது எப்படி?
பிளே ஸ்ரோரில் இருந்து UPI-ஆதரவு ஆப்ஸை (Google Pay, PhonePe போன்றவை) நிறுவவும்.
உங்கள் வங்கிக் கணக்கை இணைத்து, பயன்பாட்டில் UPI பின்னை அமைக்கவும்.
ஆப்ஸ் அமைப்புகளுக்குச் சென்று UPI லைட் அம்சத்தைச் செயல்படுத்தவும்.
உங்கள் வங்கி UPI லைட்டை ஆதரிப்பதை உறுதிசெய்து, அதை செயலியுடன் இணைக்கவும்.
நீங்கள் விரும்பும் பரிவர்த்தனை வரம்பை (ரூ 1000 வரை) தேர்வு செய்யவும்.
நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் பின்னை உள்ளிடாமல் சிறிய பரிவர்த்தனைகளை செய்யலாம்.