fbpx

இன்ஸ்டாகிராமிலும் விரைவில் புதிய வசதி!… பழைய ஞாபகங்களை மீட்டெடுக்கலாம்!… மெட்டா அறிவிப்பு!

பேஸ்புக்கில் உள்ளதைபோல், இன்ஸ்டாகிராமிலும் பயனாளர்கள் தங்களது பழைய ஞாபகங்களை மீட்டெடுக்கும் வகையில் விரைவில் மெமரி வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மெட்டா அறிவித்துள்ளது.

பேஸ்புக்கில் நமது பழைய ஞாபகங்களை மீட்டெடுக்கும் வகையில் ON this day என்ற நோட்டிஃபிகேஷன் வரும் வகையில் 2015 ஆம் ஆண்டு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, நாம் பேஸ்புக்கை அதிகளவில் பயன்படுத்தாவிட்டாலும் “பாருங்களேன் இந்த விஷியத்தை நீங்கள் பதிவு பண்ணீருக்கிங்க” பாணியில் ON this day என்ற நோட்டிஃபிகேஷன் வரும். இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் பேஸ்புக்கை உபயோகப்படுத்திவருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் பயன்பாடு முந்தைய அளவை விட 10% குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டை அதிகரிக்க பேஸ்புக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட மெமரீஸ் வசதியை போல் இன்ஸ்டாவிலும் புதிய வசதியை அறிமுகம் செய்ய அதன் தாய் நிறுவனமான மெட்டா திட்டமிட்டுள்ளது. விரைவில் இன்ஸ்டாகிராமிலும் memory என்கிற வசதியின் மூலம் பயனாளர்கள் தங்களது பழைய ஞாபகங்களை மீட்டெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Kokila

Next Post

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு...! மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்து அதிரடி உத்தரவு...! முழு விவரம் இதோ...

Wed Feb 15 , 2023
சென்னை மெட்ரோ ரயில் பணி காரணமாக மேலும் 2 ஆண்டுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாகச் சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சென்னை மெட்ரோ ரயில் பணி காரணமாகப் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலையில் CMRL ஆல் மேற்கொள்ளப்பட உள்ளக் கட்டுமானப் பணிகளைக் கருத்தில் கொண்டு. சென்னை மெட்ரோ பணிகளைச் செய்ய வசதியாகப் போக்குவரத்து மாற்றங்கள் திட்டமிடப்பட்டுக் கடந்த 01.02.2023 ம் தேதி முதல் ஒரு […]

You May Like