உலகளவில் அதிக பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் முன்னணி மெசேஜிங் ஆப்-ஆக உள்ளது.. இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.. வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களின் வசதிக்காக பல்வேறு புதிய வசதிகளையும், அப்டேட்களையும் வழங்கி வருகிறது.. அந்த வகையில் விரைவில் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது..

பயனர்கள் தங்களின் Chats மற்றும் Whatsapp groups-களுக்குள் செய்திகளைப் பின் செய்யும் வகையில் புதிய அம்சம் வரப்போகிறது… பயனர்கள் முக்கியமான செய்திகளை Chats-ன் மேற்புறத்தில் பின் செய்ய அனுமதிக்கும் என்பதால் இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும் கூறப்படுகிறது.. எனினும் இந்த புதிய வசதியை பெற தங்கள் வாட்ஸ் அப் செயலியை பிளே ஸ்டாரில் அப்டேட் செய்ய வேண்டும்..
மேலும், பின் செய்யப்பட்ட செய்திகள், முக்கியமான செய்திகளை எளிதாக அணுக பயனர்களை அனுமதிப்பதன் மூலம், அதிக செய்திகளைப் பெறும் குழுக்களில் அமைப்பை இது மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.. மேலும் Chats மற்றும் குழுக்களுக்குள் செய்திகளைப் பின் செய்யும் வசதி எதிர்கால புதுப்பிப்பில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
இதனிடையே Calling shortcuts என்ற புதிய அம்சத்தில் செயல்படுவதாக வாட்ஸ் அப் நிறுவனம் சார்பில் நேற்று முன் தினம் தெரிவிக்கப்பட்டது.. இது பயனர்கள் வாட்ஸ் அப் அழைப்புகளை எளிய வழியை மேற்கொள்ள அனுமதிக்கும். ஒரே நபருக்கு அடிக்கடி அழைப்புகளை மேற்கொள்ளும் பயனர்களுக்கு இந்த அம்சம் உதவிகரமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது..