மத்திய பட்ஜெட்டில் மெகா அறிவிப்பாக ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அறிவிக்கப்பட்டது நடுத்தர மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அதேபோல விரைவில் தாக்கல் செய்யவுள்ள புதிய வருமான வரி சட்டம் குறித்தும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்துள்ள பேட்டியில், “வருமான வரி சட்டம் விரைவில் இந்த காலத்திற்கு ஏற்றார் போல மாற்றி அமைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்
தொடர்ந்து பேசிய அவர், “வருமான வரி சட்டம் நவீனமானதாகவும், 21ஆம் நூற்றாண்டுக்கு பொருத்தமானதாகவும் மாற்றப்பட உள்ளது. இன்றைய நவீன தொழில்நுட்ப யுகத்தில் வரி செலுத்துவோர், தங்கள் வரி தொடர்பான விவகாரங்களை ஆன்லைனில் தாங்களாகவே கையாளுகின்றனர். இது சீராக நடக்க வேண்டுமென்றால், வரி விதிப்பு முறையை எளிமைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு செய்வதால், வரி செலுத்தும் நடைமுறை சுலபமாக மாறும் மாறும். எளிமையான வரி முறையை உருவாக்க வேண்டும் என்பதே இலக்கு” என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். எனவே, அடுத்த வாரம் தாக்கல் செய்ய உள்ள புதிய வருமான வரி சட்டத்தில் இந்த விஷயங்களை எதிர்பார்க்கலாம்.
Read More : மாதம் ரூ.62,000 சம்பளம்..!! இந்த கல்வித் தகுதி இருந்தால் போதும்..!! சென்னை மெட்ரோ நிர்வாகத்தில் வேலை..!!