fbpx

வாடகை வீட்டில் வசிக்கும் நபர்களா நீங்க…? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்…!

வாடகை வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு ஒரு நிம்மதி தரும் வகையில் சமீபத்தில் மத்திய அரசு மாதிரி குத்தகை சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. புதிய சட்டத்தை உருவாக்குவதன் மூலமோ அல்லது தற்போதுள்ள குத்தகைதாரர் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்வதன் மூலமோ இதை செயல்படுத்தலாம்.

அந்த வகையில் மாதிரி குத்தகை சட்டத்தில், மாநிலங்களில் தொடர்புடைய அதிகாரத்தை உருவாக்குவதற்கான முன்மொழிவு உள்ளது. வாடகை சொத்துகள் தொடர்பான எந்தவொரு சர்ச்சையையும் விரைவாகத் தீர்ப்பதற்கு வாடகை நீதிமன்றங்கள் மற்றும் வாடகை தீர்ப்பாயங்களை மாநில அரசுகள் அமைக்க முடியும். இது நாடு முழுவதும் உள்ள வீடுகளை வாடகைக்கு விடுவது தொடர்பான சட்ட கட்டமைப்பை மாற்றியமைக்கவும், அதன் மூலம் இத்துறையின் மேலும் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

இந்த சட்டத்தை அமல்படுத்தும் உரிமை மாநிலங்களுக்கு இருக்கும். புதிய சட்டத்தை உருவாக்குவதன் மூலம், குத்தகைதாரரும், நில உரிமையாளரும் பல உரிமைகளைப் பெறுவார்கள். வீடு அல்லது சொத்தின் உரிமையாளருக்கும் குத்தகைதாரருக்கும் இடையே தகராறு ஏற்பட்டால், அதைத் தீர்ப்பதற்கான சட்டப்பூர்வ உரிமை இருவருக்கும் கிடைக்கும். யாருடைய சொத்தையும் யாரும் கையகப்படுத்த முடியாது. வீட்டு உரிமையாளர் கூட வாடகைதாரரை துன்புறுத்தி வீட்டைக் காலி செய்யச் சொல்ல முடியாது. இதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாடகை வீட்டில் வசிக்கும் நபர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்…

ஒவ்வொரு வீட்டின் உரிமையாளரும் குறிப்பிட்ட தொகையை வாடகைதாரரிடம் இருந்து முன்பணமாக பெறுகின்றனர். ஆனால் சட்டப்படி ஒரு மாத வாடகை தொகை தான் முன்பணமாக வசூலிக்கப்பட்ட வேண்டும். வீட்டின் வாடகை எப்போது வேண்டுமானாலும் உயர்த்தப்படும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் வீட்டின் உரிமையாளர் எப்போது வேண்டுமானாலும் வாடகையை உயர்த்தலாம். அப்படியில்லாமல் திடீரென்று வாடகையை உயர்த்தினால் நீங்கள் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய அனைத்து உரிமைகளும் உண்டு.

மேலும் வீட்டின் உரிமையாளர் வாடகையை உயர்த்துவதற்கு தகுந்த காரணங்கள் இருக்கும் பட்சத்தில் அதற்கு வாடகைதாரர் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் உரிமையாளர் நீதிமன்றத்தில் முறையிடலாம். மேலும் வாடகைதாரர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை தொந்தரவு செய்பவராக இருந்தாலோ அல்லது வீட்டில் தங்காமல் 4 மாதங்களுக்கு வீட்டை பூட்டியிருந்தாலோ அல்லது ஏதேனும் சட்ட விரோதமான செயல்கள் எதையும் வீட்டில் செய்வது தெரிந்தாலோ அவர்களை வீட்டை விட்டு காலி செய்யலாம்.

இதேபோல வீட்டில் சரியான முறையில் தண்ணீர் வசதி, மின்சார வசதி போன்ற அத்தியாவசியமான வசதிகளில் குறைபாடு இருந்தாலோ அல்லது வசதி நிறுத்தப்பட்டாலோ அல்லது காரணமே இல்லாமல் வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்ய சொன்னாலோ வாடகைதாரர்கள் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து தீர்ப்பின் அடிப்படையில் உரிமையாளரிடமிருந்து உங்களுக்கான இழப்பீட்டு தொகையை பெறலாம்.

Vignesh

Next Post

பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு மடிக்கணினி..!! முதல்வர் சொன்ன முக்கிய தகவல்..!!

Tue Nov 15 , 2022
மாணவர்களுக்கு ஓரிரு மாதங்களில் மடிக்கணினி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க உள்ளதாகவும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஓரிரு மாதங்களில் மடிக்கணினி வழங்கப்படும் எனவும் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடத்தப்பட்ட விழாவில் கலந்துகொண்டு பேசிய புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, நிலைத்த கல்விக்கு வாய்ப்பு கிடைக்காத போது மாணவர்கள் சோர்வடைய கூடாது. ஒரே சிந்தனையோடு […]
பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு மடிக்கணினி..!! முதல்வர் சொன்ன முக்கிய தகவல்..!!

You May Like