fbpx

பள்ளி மாணவர்களுக்கு வெளியான புதிய உத்தரவு.! பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அதிரடி.!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாது சுய ஒழுக்கம் பொது சேவைகளிலும் சிறந்து விளங்கும் வகையில் அவர்களை தயார் படுத்துவதற்காக அரசும் கல்வித்துறை அதிகாரிகளும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பள்ளிகளில் தூய்மை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது .

இதனைத் தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்கள் வருகின்ற ஜனவரி 8-ம் தேதியிலிருந்து 10-ம் தேதி வரை தூய்மை பணியில் ஈடுபட வேண்டும் என புதிய திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த உத்தரவினை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் வெளியிட்டு இருக்கிறார். இந்தத் திட்டத்தின் மூலம் மாணவர்களிடம் தூய்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நாம் பணியாற்றும் இடங்கள் மற்றும் நமது வீடு போன்ற பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்வதன் அவசியத்தை மாணவர்கள் உணர்ந்து கொள்ளும் பொருட்டு இது போன்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தெரிவித்திருக்கிறார். மேலும் மாணவர்களிடம் நெகிழி பொருட்களை தவிர்ப்பதை பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Next Post

Breaking: பல தாக்குதல்களின் 'மாஸ்டர் மைண்ட்' தீவிரவாதி அதிரடி கைது.! இந்தியாவில் சதி செயல்களுக்கு திட்டமா.?

Thu Jan 4 , 2024
இந்திய ராணுவம் மற்றும் காவல் துறையால் தேடப்பட்டு வந்த முக்கிய தீவிரவாதி காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெற இருக்கும் நிலையில் அந்த நபர் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பல தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய ஸ்கூல் முஜாஹிதீன் தீவிரவாதி ஜாவித் அகமது மட்டு. இவர் மீது […]

You May Like