fbpx

பாகிஸ்தான் அணிக்கு வந்த புதிய சிக்கல்..!! 4 வீரர்களுக்கு வைரஸ் தொற்று..!! மருத்துவர்கள் கண்காணிப்பு..!!

2023 உலகக்கோப்பை தொடரில் ஆடி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் 4 வீரர்களுக்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

பெங்களூரில் அடுத்த போட்டியில் ஆட உள்ள பாகிஸ்தான் அணி வீரர்கள் யாரும் பயிற்சி செய்ய வெளியே வரவில்லை. இதை அடுத்து பாகிஸ்தான் அணியில் என்ன நடக்கிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது. பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியாகி உள்ள தகவலின் படி, பாகிஸ்தான் அணியில் துவக்க வீரர் அப்துல்லா ஷபிக் மற்றும் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி, கடந்த போட்டியில் அணியில் இடம் பெறாத உசாமா மிர் மற்றும் பாக்கர் ஜமான் ஆகிய 4 வீரர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் அணி தோல்வி சந்தித்தது. ஆனால், அதை பாகிஸ்தான் வீரர்கள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் விளையாட பெங்களூரு கிளம்பி வந்துள்ளது பாகிஸ்தான் அணி. அக்டோபர் 20ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி நடைபெற உள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் அணி இன்று (அக்டோபர் 17) பயிற்சியை துவக்கி இருக்க வேண்டும். ஆனால், இதுவரை எந்த வீரரும் பயிற்சி செய்ய ஹோட்டல் அறையை விட்டு வெளியே வரவில்லை என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. ஷஹீன் ஷா அப்ரிடி மற்றும் அப்துல்லா ஷபிக் அந்த அணியில் முக்கிய வீரர்களாக உள்ளனர். சமீபத்தில் தான் ஷபிக் அணியில் இடம் பெற்றார். ஆனால், அவர் ஒவ்வொரு போட்டியிலும் ரன் குவித்து தன்னை நிரூபித்து இருக்கிறார். இப்படிப்பட்ட நேரத்தில் வீரர்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போய் இருக்கிறது.

Chella

Next Post

’இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தினால் பிணைக் கைதிகளை விடுவிக்க தயார்’..!! ஹமாஸ் அமைப்பு அறிவிப்பு..!!

Wed Oct 18 , 2023
பாலஸ்தீனத்தின் காஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் விமானப் படை நிகழ்த்திய படுபயங்கரமான குண்டுவீச்சுகளில் 500-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட நிலையில், உலக நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. ஜெர்மன் தாக்குதலில் இருந்து தப்பி வந்த யூதர்களுக்கு, பாலஸ்தீனர்கள் அடைக்கலம் கொடுத்தனர். பின்னர் ஐநா சபை 1947இல் பாலஸ்தீனத்திலிருந்து பாதிக்கும் அதிகமான பகுதியை பிரித்து கொடுத்து இஸ்ரேலை உருவாக்க முடிவெடுத்தது. இதற்கு பாலஸ்தீன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கடந்த 75 ஆண்டுகளில் […]

You May Like