பொது விநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் அரிசி உள்ளிட்ட இன்றியமையாப் பொருட்களை நியாயவிலைக் கடைகள் வாயிலாகப் பெற்று பயன்பெறும் வண்ணம் புதிய குடும்ப அட்டைகள் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 7.5.2021 முதல் 15 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே இணைய வழி மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியுடைய புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படுகின்றன. இவர்கள் அனைவருக்கும் அவர்கள் கொடுத்த அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் புதிய குடும்ப அட்டைகளை வட்ட வழங்கல் அலுவலகங்களில் தங்கள் குடும்ப உறுப்பினர் யாராவது ஒருவர் சென்று பெற்றுக்கொள்ளலாம்.
இந்த நிலையில் ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்த 3 லட்சம் பேரில், 1.30 லட்சம் பேருக்கு கார்டுகள் தயாராக உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். புதிய கார்டுகளை விநியோகிக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். அடுத்த மாதம் முடிவதற்குள் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்றும், அதற்கான பணிகள் தொடங்கியதாக சொல்லப்படுகிறது.