fbpx

40 கி.மீ வேகம் தான்…! இன்று முதல் வாகனங்களுக்கு கட்டுப்பாடு அமல்… மீறினால் ரூ.1,000 அபராதம்…! காவல்துறை எச்சரிக்கை…!

மாநகரில் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில், நான்கு சக்கர வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷாக்களுக்கான புதிய வேக வரம்புகளை சென்னை போக்குவரத்துக் காவல் துறை அறிவித்துள்ளது.

நகர போக்குவரத்து காவல்துறையின் அறிவிப்பு படி,, இலகுரக மோட்டார் வாகனங்கள் வேக வரம்பு மணிக்கு 60 கிமீ மற்றும் கனரக மோட்டார் வாகனங்கள் மணிக்கு 50 கிமீ வேகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, இரு சக்கர வாகனங்களில் வேக வரம்பு மணிக்கு 50 கிமீ ஆகவும், ஆட்டோ ரிக்‌ஷாக்கள் மணிக்கு 40 கிமீ ஆகவும் உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் செல்லும் பொழுது, அனைத்து வகையான வாகனங்களுக்கும் 30 கி.மீ., வேக வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வேக வரம்புகளையும் மீறினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்; 2022-ம் ஆண்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 4,61,312 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன, இதில் 1,68,491 பேர் உயிரிழந்துள்ளனர். 4,43,366 பேர் காயமடைந்துள்ளனர். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது விபத்துகளின் எண்ணிக்கை 11.9 சதவீதமும், இறப்புகளின் எண்ணிக்கை 9.4 சதவீதமும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 15.3 சதவீதமும் அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது. அதிவேகம், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து விதிமுறைகளுக்கு இணங்காதது உள்ளிட்டவை இந்த விபத்துகளுக்குக் காரணங்களாக அமைந்துள்ளன.சாலை விபத்துகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

2022-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் மொத்தம் 64,105 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. 2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு தொடர்ந்து முதல் இடத்தில் இருந்துள்ளது

Vignesh

Next Post

சக்திவாய்ந்த நிலநடுக்கம்!… 48 பேர் பலி!… நள்ளிரவில் குலுங்கிய டெல்லி, உ.பி., பீகார் மாநிலங்கள்!… பீதியில் மக்கள்!

Sat Nov 4 , 2023
நேபாளத்தில் 6.4 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. நேபாளத்தில் நேற்று இரவு 11.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கமானது நேபாளத்தில் 10 கி.மீ ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி ருக்கும் மேற்கு பகுதியில் 28 பேரும், ஜாஜர்கோட்டில் […]

You May Like