fbpx

விருந்துக்கு போன இடத்தில் உயிரிழந்த புதுமணத் தம்பதி.! தேனியில் சோகம்.!

தேனி மாவட்டத்திலுள்ள பொம்மையகவுண்டன்பட்டியில் ராஜா என்ற 30 வயது நபர் ஒரு மாதத்திற்கு முன் காவியா என்ற 20 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் போடியில் இருக்கும் ராஜா உடைய அக்கா வீட்டிற்கு திருமண விருந்திற்கு சென்றனர்.

இதன் பின்னர், உறவினர்களுடன் சேர்ந்து ராஜா மற்றும் காவியா இருவரும் அங்கிருக்கும் ஆட்சி பகுதிக்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஆற்றில் இறங்கி இருவரும் குளித்த போது அக்கா மகன் சஞ்சய், காவியா, ராஜா உள்ளிட்ட மூன்று பேரும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

இதனால் பதற்றம் அடைந்த பிரணவ் என்ற உறவினர் உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்த நிலையில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இருவரும் சேர்ந்து காணாமல் போன மூன்று பேரையும் தேடினர்.

அதன் பின் நீண்ட நேரத்திற்கு பிறகு மூன்று பேரையும் சடலமாக மீட்டுள்ளனர். ராஜா, சஞ்சய், காவியா ஆகியோரின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புதுமண தம்பதி விருந்துக்கு சென்ற இடத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Baskar

Next Post

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு.!

Sun Oct 16 , 2022
ஈரோடு மாவட்டத்தில் உள்ள உக்கடம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் கூலி தொழிலாளியாக வசித்து வந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டில் இரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமி செந்தில்குமாரின் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தது. அந்த சிறுமியை மிட்டாய் வாங்கி தருவதாக கூறி ஆசை காட்டி வீட்டிற்குள் அழைத்து பாலியல் ரீதியாக தொல்லை செய்துள்ளார். ஏதோ அசௌகரியமாக நடப்பதை உணர்ந்த சிறுமி அங்கிருந்து தப்பியோடு தனது பெற்றோரிடம் அழுது கொண்டே […]

You May Like