அரியலூர் மாவட்டத்தில் திருமணமான புது மாப்பிள்ளை ஒருவர் தகராறில் ஈடுபட்டு சுயநினைவை இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள தழுதாழைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயமணி. இவர் குடிபோதையில் இருந்த நிலையில் உதயநத்தம் என்ற கிராமத்தைச் சார்ந்த கார்த்திக் என்பவர் உடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்நிலையில் ஜெயமணியை தொடர்பு கொண்ட கார்த்திக் செல்போன் மூலம் பேசி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தழுதாழைமேட்டைச் சார்ந்த பவித்ரன் என்பவரை தலையில் அருவாளால் வெட்டி இருக்கிறார் ஜெயமணி. தன்னை பற்றி கார்த்திக்கிடம் பவித்திரன் தான் தெரிவித்திருக்கிறார் என நினைத்து பவித்திரனையும் பவித்திரனுடைய தந்தையையும் அறிவாளால் சரமாறியாக வெட்டியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். பவித்ரன் என்பவருக்கு 15 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் ஆகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. காயம்பட்ட பவித்திரனை அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அவருக்கு தலையில் சரமாறியாக வெட்டியதால் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த மருத்துவர்கள் உடனடியாக திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதால் பவித்ரன் கோமா நிலையில் இருந்து வருகிறார். திருமணமான 15 நாட்களில் புது மாப்பிள்ளை சுயநினைவு இல்லாமல் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் இருப்பது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை தப்பி ஓடிய ஜெயமணியை தீவிரமாக தேடி வருகின்றனர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக புது மாப்பிள்ளை வெட்டுப்பட்டு சுயநினை இல்லாமல் இருக்கும் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.