சமீபகாதமாக தமிழகத்தில் வீடுகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு காவல் துறை பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், இந்த திருட்டு சம்பவத்தை அவ்வளவு எளிதில் காவல் துறையினரால் கூட கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாக உள்ளது
அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே இருக்கின்ற புதுப்பேட்டை கிராமத்தில் வசித்து வருபவர் சின்ராஜ், இவர் ஒரு விவசாயி இவருடைய மனைவி சித்ரா இந்த தம்பதிகள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் சென்னையில் வேலை பார்த்து வரும் தன்னுடைய இரு மகன்களை பார்ப்பதற்காக சென்னைக்கு சென்றனர்.நேற்று முன்தினம் இரவு இவர்கள் சென்னையிலிருந்து ஊர் திரும்பினர். வீட்டிற்கு வந்து பார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சிக்கு ஆளான சின்ராஜ் வடபொன்பரப்பி காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கினார். அதன் பெயரில், ஆய்வாளர் பாண்டியன் தலைமையில் மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் உள்ளிட்டோர் வந்து தடயங்களை சேகரித்தனர். உடைக்கப்பட்டு 114 சவரன் நகை, 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 1.5 லட்சம் ரூபாய் ரொக்க பணம் உள்ளிட்டவை திருடு போனதாக சின்ராஜ் காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து இது குறித்து காவல்துறை தரப்பில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.