தமிழ்நாடு விடுதிகள் மற்றும் வீடுகள் சட்டம் 2014-ன் அடிப்படையில் அனைத்து பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகளும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறையான அனுமதி பெற வேண்டும்.
இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழகத்தில் இருக்கின்ற 1748 பெண்கள் தங்கும் விடுதிகளில், 1,115 விடுதிகள் அனுமதி இல்லாமல் செயல்படுவதாக கூறப்பட்டுள்ளது.
சென்னையில் இருக்கின்ற 714 பெண்கள் தங்கும் விடுதிகளில் 31 விடுதிகள் மட்டுமே இதற்கான முறையான அனுமதியை பெற்றிருப்பதாகவும், சென்னையில் மட்டும் 683 பெண்கள் தங்கும் விடுதிகள் சரியான அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருவதாகவும் கூறப்பட்டிருக்கிறது. இது போன்ற பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு ஒற்றை சாரள முறை அனுமதியை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று விடுதி அமைப்பாளர்கள் அரசுக்கு கோரிக்கைவிடுத்து இருக்கிறார்கள்.
சென்னைக்கு அடுத்தபடியாக திருப்பூரில் 113 விடுதிகள் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருகின்றன. இது குறித்து தமிழக முழுவதும் இருக்கின்ற 873 பெண்கள் தங்கும் விடுதிகளுக்கு சமூக நலத்துறை இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. கடந்த 10 வருடங்களில் தமிழ்நாடு முழுவதிலும் 379 பெண்கள் தங்கும் விடுதிகள் மூடப்பட்டிருப்பதாக ஆர்டிஐ தகவல் மூலம் தெரிய வந்திருக்கிறது.