சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வட தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் வளிமண்டலுக்கு சுழற்சியின் நிலவுகிறது. தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் இன்று ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி ஏற்படுகிறது. என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் அந்தப் பகுதியில் வரும் 8ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் இது 9ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையை நோக்கி நகர்ந்து மத்திய வங்க கடல் பகுதியில் புயலாக வலுபெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மதம் மலை இன்று பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கரூர், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல நாளையும், நாளை மறுநாளும் தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. வந்ததே மற்றும் 10ம் தேதிகளில் தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. 10ம் தேதி வரையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல பகுதிகளில் அதிகபட்சமான வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் உயரலாம் என்று கூறப்படுகின்றது.
அதேபோல சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரத்தின் ஊரிடு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.