தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதன் முடிவை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். வழக்கம் போல இதில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர் அதே நேரம் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் அனைத்து பாடங்களிலும் 100க்கு 100 மதிப்பெண் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நந்தினி சாதனை படைத்திருக்கிறார்.
பானுப்பிரியா, சரவணகுமார் தம்பதியினரின் மகளான இவர், அண்ணாமலையார் பள்ளியில் படித்தவர். இவர் தேர்வில் அனைத்து பாடங்களிலும் முழுமையான மதிப்பெண்களை பெற்று 600க்கு 600 மதிப்பெண்களை பெற்று சாதனை நிகழ்த்தி இருக்கிறார்.
இப்படி மிகப்பெரிய சாதனை படைத்துள்ள மாணவி நந்தினி ஒரு கூலி தொழிலாளியின் மகள். இவர் 12 ஆம் வகுப்பு தேர்வில் இப்படி ஒரு சாதனை படைத்ததை தொடர்ந்து, இவருடைய கனவு என்னவாக இருக்கும்? என்பதை அறிந்து கொள்ள எல்லோரும் ஆவலாக இருந்தார்கள் தற்போது அந்த மாணவி தன்னுடைய ஆசையை கூறியுள்ளார்.
அதாவது 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் அனைத்து பாடங்களிலும் முழுமையான மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ள மாணவி நந்தினி, தனக்கு ஆடிட்டராக வேண்டும் என்ற ஆசை இருப்பதாக கூறியுள்ளார். ஆகவே தற்சமயம் மாணவியின் கனவு நிறைவேற வேண்டும் என்று பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.