ஒரு பெண் கல்வி கற்பதால்தான் நாடு மிக விரைவில் முன்னேறும் என்று நம்முடைய அரசியல் தலைவர்கள் பல நேரங்களில் சொல்லி இருக்கிறார்கள், அது உண்மையும் கூட.
ஆகவே தான் பெண் கல்வியை பாதுகாக்கும் விதத்தில், மத்திய, மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல பெண்களும் கல்வி கற்பதில் சாதனை படைத்து வருகின்றனர். என்றளவும் மாநில மற்றும் மாவட்ட அளவில் தேர்வில் முதலிடம் பிடிப்பதில் பெண்களே சிறந்து விளங்குகிறார்கள்.
ஆனாலும் பெண் கல்வியை சீரழிக்கும் விதத்தில் இன்னும் ஒரு சிலர் செயல்பட்டு தான் வருகிறார்கள். கல்வியை மட்டும் சீரழிந்தால் பரவாயில்லை, பல பெண் குழந்தைகளின் வாழ்க்கையும் சீரழியும் நிலை இருக்கிறது.
அந்த விதத்தில், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே இருக்கின்ற மாலையைக்கவுண்டன்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ராமநாதபாண்டியன்(23). இவர் கடந்த 2020 ஆம் வருடம் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார்.
இது தொடர்பாக திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் துறையினர் ஓசூர் சட்டத்தின் கீழ் அழகு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ராமநாதபாண்டியனுக்கு 20 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் உள்ளிட்டவற்றை விரித்து நீதிபதி சரண் தீர்ப்பு வழங்கினார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோதி ஆஜராகி வாதிட்டார்.