fbpx

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே இயங்கி வந்த அரசு மதுபான கிடங்கில்…..! நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 லாரிகளில் இருந்து 200 மதுபானங்கள் திருட்டு காவல்துறையினர் விசாரணை…..!

சிவகங்கை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் திருபுவனத்தில் அரசு மதுபான கிடங்கு ஒன்று இயங்கி வருகிறது. இங்கே பல்வேறு மாவட்டங்களில் இருந்து மதுபானங்கள் லாரிகளின் மூலமாக கொண்டு வரப்பட்டு அதன் பிறகு அங்கிருந்து அரசு டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

அதாவது குடோனில் மதுபானங்கள் இருப்பு அதிகமாக இருந்தால் லாரிகளில் கொண்டு வரப்படும் மதுபானங்கள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டு, அதன் பிறகு குடோனில் இடம் காலியான பிறகு அங்கு மதுபான பெட்டிகளை பாதுகாப்பாக இறக்கி வைப்பது வழக்கம் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து இரண்டு லாரிகள் மூலமாக மதுபானம் ஏற்றி வந்து அந்த லாரிகள் கடந்த மூன்று நாட்களாக அந்த குடோன் அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இதற்கு நடுவே நேற்று இரவு லாரி ஓட்டுநர்கள் லாரிக்கு பின்புறமாக சென்று பார்த்தபோது மதுபாட்டில்கள் இருக்கின்ற அட்டை பெட்டிகள் கிழிக்கப்பட்டு, சுமார் 200 மது பாட்டில்கள் காணாமல் போனது தெரியவந்தது.லாரி ஓட்டுனர்களான பாலகுமார்(55) மற்றும் இம்மானுவேல் (45) உள்ளிட்டோர் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகார் வழங்கியதன் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

Next Post

கணவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் விரக்தி…..! மகளுடன் தற்கொலை செய்து கொண்ட மனைவி சென்னையில் பரிதாபம்…..!

Mon May 15 , 2023
ஆந்திர மாநிலம் ஓங்கோல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (42).இவர் மளிகை கடை நடத்தி வருகிறார் மூளையில் ரத்தக் கசிவு காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி முதல் சென்னையில் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், ஹரி கிருஷ்ணனின் சகோதரர் பிரசாத் மருத்துவமனையில் இருந்து அவரை கவனித்து வருகிறார். சொந்த ஊருக்கு சென்றிருந்த ஹரிகிருஷ்ணனின் மனைவி வெங்கடசுமலதா(34), அவருடைய மகன் […]

You May Like