fbpx

அரக்கோணம் அருகே தண்ணீர் பாம்பை வாயால் கடித்து போன்ற வீடியோவை வலைதளங்களில் பகிர்ந்த மூவர் அதிரடி கைது……!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சின்னக்கைனூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (33). எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வரும் இவரும், அவருடைய நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சூர்யா(21), சந்தோஷ் (21) உள்ளிட்டோரம் கூட்டாக இணைந்து கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி சின்னக்கைனூர் ஏரிக்கரை அருகே அமர்ந்து மது குடித்திருக்கிறார்கள்.

அப்போது மது போதையில் இருந்த மோகனின் கைமீது ஏரிக்கரையில் இருந்த தண்ணீர் பாம்பு ஒன்று ஏறி இருக்கிறது அதோடு அவருடைய கையை அந்த பாம்பு கடித்ததாக சொல்லப்படுகிறது. மது பாதைகள் இருந்தால் மோகன் அந்தப் பாம்பை கையில் பிடித்து அதனை துன்புறுத்த தொடங்கி இருக்கிறார்.

உடன் இருந்தவர்கள் அதனை தங்களுடைய கைபேசியில் வீடியோவாக பதிவு செய்து இருக்கிறார்கள். மது போதையில் இருந்த மோகன் என்னை எல்லோரும் பிணந்தின்னினு கூப்பிடுறீங்க அதை இப்போ நிரூபிக்க போறேன் என்று தெரிவித்து கையில் இருந்த பாம்பை வாயில் வைத்து பல்லால் கடித்து கொன்றிருக்கிறார்.

அதன் பிறகு தலை மற்றும் உடல் என்று இரு துண்டாக பாம்பை தரையில் வீசி உள்ளார். இந்த வீடியோவை கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் தேதி சமூக வலைதளங்களில் அவர்கள் பகிர்ந்துள்ளனர் அந்த வீடியோ வைரலானதால் இது தொடர்பாக வன உயிரினங்கள் பாதுகாப்பு குழு அமைப்பினர் ஆற்காடு வனச்சரக அலுவலர் அலுவலகத்திற்கு புகார் வழங்கினர். ஆகவே வனத்துறையின் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் நேற்று கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

Next Post

ஆன்லைன் திரைப்பட விமர்சன மோசடியில் ரூ.76 லட்சத்தை இழந்த பெண்.. என்ன நடந்தது..?

Thu Apr 6 , 2023
ஆன்லைன் பரிவர்த்தனைகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ள அதே சூழலில், சைபர் கிரைம் கணிசமாக அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. பல்வேறு நூதுன வழிகளை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் மக்களை ஏமாற்றி பணத்தை திருடி வருகின்றனர்.. எனவே பொதுமக்கள் ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும்போது எப்போதும் எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய மோசடி ஒன்று அரங்கேறி வருகிறது.. பகுதி நேர வேலையாக திரைப்படங்களைப் பார்த்து […]

You May Like