fbpx

புலியை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட நால்வர் அதிரடி கைது…..!

நீலகிரி மாவட்டம் எடக்காடு என்ற பகுதியில் புலியை வேட்டையாடி அதனை சமைத்து சாப்பிட்டதாக கைது செய்யப்பட்ட 4️ பேரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கி இருக்கிறார்கள்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரசூர் என்ற பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த சிலர் தற்காலிக குழுக்களை அமைத்து வசித்து வந்ததாகவும் அவர்கள் மீது சந்தேகம் உள்ளதாகவும் வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் தங்குமிடத்தை வனத்துறையினர் சோதனை நடத்திய போது ஒரு பையில் புலித்தோல், புலி நகம், எலும்புகள் உள்ளிட்டவை பதித்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் அவற்றை பறிமுதல் செய்து பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த ரத்னா (40) மங்கல் (28) கிருஷ்ணன் (59) ராஜஸ்தானை சேர்ந்த ராம்சந்தர் (50) உள்ளிட்ட நால்வரை வனத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் இந்த கும்பல் நீலகிரி மாவட்டம் குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட எடக்காடு அருகே அடர்ந்த வனப்பகுதியில் சுருக்கு வைத்து புலியை வேட்டையாடியதுடன் அதன் இறைச்சியை சமைத்து சாப்பிட்டதுடன் புலி நகங்கள், எலும்புகள் உள்ளிட்டவற்றை கடத்தியதும் தெரிய வந்திருக்கிறது.

ஆகவே கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் நீலகிரி மாவட்ட வன அலுவலர் கௌதம் உதவி என பாதுகாவலர் சரவணன் சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து உதவி வன பாதுகாவலர் சரவணன் தெரிவிக்கும்போது வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் உள்ளூர் மக்களுடன் இணைந்து இன்று செயலில் ஈடுபட்டார்களா? என்ற விதத்தில் விசாரணை செய்து வருகின்றோம்.

கிராமங்களில் சந்தேகப்படும்படி சுற்றி திரியும் வட மாநிலத்தைச் சார்ந்தவர்கள் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

இது குறித்து வன ஆர்வலர்கள் தெரிவிக்கும்போது வனத்துறையினருக்கு தொடர்பு இருக்கிறதா? என்ற விதத்தில் வனத்துறையினர் விசாரிக்க வேண்டும் என்று கூறினர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கைது செய்யப்பட்ட இந்த கும்பலுடன் வனத்துறையைச் சார்ந்தவர்களுக்கு ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று கவனத்திற்கு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வன ஆர்வலர்கள் தெரிவித்ததை தொடர்ந்து காவல்துறையினர் அதிரடி விசாரணையில் இறங்கினர்.

Next Post

மகளிர் டி20 உலகக்கோப்பை..!! இன்று அரையிறுதிப் போட்டி..!! இந்தியா - ஆஸ்திரேலியா பலப்பரீட்சை..!!

Thu Feb 23 , 2023
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி இன்று நடக்கிறது. ஐசிசி நடத்தும் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. இதில் குரூப் 1ல் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளும், குரூப் 2ல் இருந்து இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இதில், இன்று நடைபெறும் […]

You May Like