fbpx

சொகுசு கார்களை திருடி கடத்தல் கும்பலிடம் 4 பேர் அதிரடி கைது….!

சொகுசு கார்களை திருடி விற்பனை செய்து வந்த கும்பலில் தொடர்புள்ள 4 பேரை டெல்லி காவல் படை கடந்த சனிக்கிழமை கைது செய்திருக்கிறது இந்த கும்பல் திருடப்பட்ட கார்களை ஹரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருக்கின்ற வாடிக்கையாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி விஜய்நகரில் திருடப்பட்ட ஃபார்ச்சூனர் காரை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கிய காவல்துறையினர் வாஹித், சவுகின், ராஜேஷ் ஷர்மா மற்றும் மகா பீர் பிரசாத் உள்ளிட்ட நால்வரை கைது செய்து இருக்கிறார்கள். காரை திருடி சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சனிக்கிழமை விஜய் நகர் பகுதியில் நடமாடுவது தொடர்பாக எங்களுக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. ஆகவே அந்த பகுதியில் காவல்துறை தடுப்புகளை அமைத்து சோதனை செய்தோம். அப்போது திருடு போன கார் மற்றும் மற்ற 3 கார்களுடன் 4️ பேர் கைது செய்யப்பட்டார்கள். என நகர காவல்துறை டி.சி.பி நிபுன் அகர்வால் தெரிவித்திருக்கிறார்.

பிடிபட்டவர்கள் தங்களுடன் மேலும் 2 பேர் இருப்பதாகவும் அவர்களுடன் சேர்ந்து தலைநகர் புதுடில்லியில் ஆடம்பரமான காலனிகளுக்கு சென்று சொகுசு கார்களை திருடி வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்கள். இவர்கள் திருடிய கார்களில் நம்பர் பிளேட்டுகளை மாற்றி ஹரியானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருப்பவர்களுக்கு விற்பனை செய்து வந்திருக்கிறார்கள். கடந்த சில மதங்களாக காசியாபாத் பகுதியில் இந்த கும்பல் இதே வேலையாக இருந்து வந்ததாக அவர் கூறியிருக்கிறார்.

திருடப்பட்ட வாகனங்கள் பெரும்பாலும் போதைப்பொருள் கடத்தல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு விற்கப்பட்டிருக்கின்றன. இந்த கும்பல் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் போதை பொருள் மற்றும் வைர கடத்தலில் ஈடுபட்ட நபர்களுக்கு கார்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

காவல்துறை தரப்பில் இவர்களிடம் கார்களை வாங்கிய நபர்களைப் பற்றி அறிய முயற்சித்து வருகிறோம். இந்த வாகன திருட்டு கும்பலை சேர்ந்த மற்ற 2 பேரையும் கண்டுபிடித்து கைது செய்வதற்கும் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. என்று காவல்துறை துணை ஆணையர் அனுஷ் ஜெயின் கூறியிருக்கிறார்.

Next Post

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன்..!! அய்யப்பன் ராமசாமிக்கு கொலை மிரட்டல்..!! பாய்ந்தது வழக்கு..!!

Mon Mar 20 , 2023
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்த யூடியூபர் டிடிஎஃப் வாசன், மற்றொரு யூடியூபர் அய்யப்பன் ராமசாமிக்கு வீடியோ வெளியிட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக காரமடை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் மதன் ரவிச்சந்திரன் தனது யூடியூப் பக்கத்தில் அய்யப்பன் ராமசாமி பற்றி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோ வெளியிட்டார். அதில், அய்யப்பன் ராமசாமி குறிப்பிட்ட கட்சியிடம் பணம் வாங்கிக் […]
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன்..!! அய்யப்பன் ராமசாமிக்கு கொலை மிரட்டல்..!! பாய்ந்தது வழக்கு..!!

You May Like