fbpx

திருவண்ணாமலை அருகே…..! காவலரை தாக்கிய 3 ராணுவ வீரர்கள் உட்பட 4 பேர் அதிரடி கைது….!

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருபவர் அன்பழகன்( 32). இவர் குப்பம் கிராமத்தில் மதுவிலக்கு கண்காணிப்பு பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தார். அப்போது குப்பம் அரசு பள்ளி அருகே, 4 பேர் நிதானம் இழந்த நிலையில் ரகளையில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக சொல்லப்படுகிறது. அவர்களுடைய செயலை கண்டித்து காவலர் அன்பழகன் எல்லோரையும் வீட்டுக்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இதன் காரணமாக, அன்பழகனுக்கும், எதிர் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் உண்டாகி இருக்கிறது. இதில் காவலர் அன்பழகனுக்கு மிரட்டல் விடுத்த 4 பேரும் அவரை தாக்கியதாக சொல்லப்படுகிறது. ஆகவே 4 பேரையும் பிடித்து காவல்துறை தரப்பில் விசாரணை நடத்தியதில் குப்பம் குளத்துமேட்டு தெருவில் வசிக்கும் ராணுவ வீரர்களான சுப்பிரமணியன் என்பவரின் மகன்கள் பழனி (36), முருகன், (28) ஐயப்பன் (25) மற்றும் விவசாயி மணி என்பவரின் மகன் சரவணன்(28) உள்ளிட்டோர்தான் அந்த கும்பலை சார்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

ஆகவே அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுப்பது, அவர் மீது தாக்குதல் நடத்தியது போன்ற பிரிவுகளின் கீழ் கண்ணமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மேலும் 3 ராணுவ வீரர்கள் உட்பட 4 பேரை கைது செய்தனர். ஸ்ரீநகரில் பணிபுரியும் பழனி, ஐயப்பன் அசாம் மாநிலத்தில் பணி புரியும் முருகன்,ஆகியோர் விடுமுறைக்காக சொந்த கிராமத்திற்கு வந்திருக்கிறார்கள். மேலும் இவர்கள் மூவரும் தொடர்ந்து, பல்வேறு ரகளையில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

ஒரே வாரத்தில் தொப்பை குறைய வேண்டுமா..? அப்படினா இதை தினமும் வெறும் வயிற்றில் குடியுங்கள்..!!

Tue May 16 , 2023
நம்மில் பலர் தொப்பையை கரைக்க பல விஷயங்களை முயற்சி செய்திருப்போம். ஆனால், என்ன செய்தாலும் அதற்கான பலன் கிடைப்பதில்லை. ஒரு இன்சாவது தொப்பை குறையாதா? என கவலைப்படுபவராக இருந்தால், உங்களுக்கான ஒரு அருமையான பானம் பற்றி நாங்கள் கூறுகிறோம். பல ஆரோக்கிய நன்மைகளை கொண்ட ஜூஸ் ஒன்றினை கேரட், ப்ரோக்கோலி பயன்படுத்தி எப்படி தயாரிப்பது என இந்த தொகுப்பில் பார்க்கலாம். தேவையான பொருட்கள் : ப்ரக்கோலி – 2. கேரட் […]

You May Like