தமிழ்நாட்டில் நேற்று 16 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உட்பட 48 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். அந்த விதத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தலைவராக நகராட்சி நிர்வாக இணை ஆணையர் விஷ்ணு சந்திரன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். அதேபோல அதற்கு பக்கத்து மாவட்டமான சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவராக தமிழக தொழில் துறை வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த ஆஷா அஜித் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில், இவர்கள் இருவரும் கணவன் மனைவி என்று தற்போது தெரியவந்திருக்கிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஐஏஎஸ் முடித்த விஷ்ணு சந்திரன் தூத்துக்குடி, நாகர்கோவில் உட்பட பல்வேறு துறைகளில் பணியாற்றி இருக்கிறார். அதோடு, திருச்செந்தூர் கோவில் நிர்வாக அதிகாரியாகவும், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராகவும் பதவி வகித்தார்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாக பள்ளியைச் சேர்ந்தவர் ஆஷா அஜித். இவர் கடந்த ஜூலை மாதம் 15 ஆம் தேதி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்தவர். மேலும் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் துணை ஆட்சியராக பணியாற்றி இருக்கிறார். அதோடு நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராகவும் பதவி வகித்திருக்கிறார்.