ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் கயல்விழி மற்றும் அன்னலட்சுமி உள்ளிட்ட இருவரும் பெண்களை வைத்து விபச்சாரத் தொழிலை சட்ட விரோதமாக செய்து வந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள வைகை நகரை சேர்ந்தவர் சிகாமணி (45) அதிமுகவைச் சார்ந்த இவர் பரமக்குடி நகர்மன்ற 3வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். அதோடு இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது. அதே போல பிரபாகரன் என்பவரும், மாதவன் நகரைச் சார்ந்த ராஜா முகமது என்பவரும் இவருடன் இணைந்து 3 பேரும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், இவர்களுடைய நிறுவனத்தில் பணியாற்றும் கயல்விழி தன்னுடைய வீட்டினருகே குடியிருக்கும் குடும்பத்தில் 9ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளிக்கு பணம் செலுத்த இயலாத நிலையில், தன்னுடைய படிப்பை ஆரியிலேயே நிறுத்தும் நிலையில் உள்ளதாக சிகாமணியிடம் கூறியிருக்கின்றார். ஆகவே சிகாமணி தாம் அந்த மாணவிக்கு உதவி புரிவதாக தெரிவித்திருக்கிறார். மேலும் அந்த மாணவியை நேரில் அழைத்து வருமாறு கூறியதாக தெரிகிறது.
ஆகவே அந்த மாணவியை கயல்விழி நேரில் அழைத்து வந்திருக்கிறார்.
மாணவியை காரில் ஏற்றுக்கொண்டு சிகாமணி ஒரு தனியார் விடுதிக்குச் சென்றுள்ளார். அங்கு தனியறை எடுத்து அந்த மாணவியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மேலும் பிரபாகரன், ராஜா முகமது உள்ளிட்ட இருவரும் சேர்ந்து மூவரும் அடுத்தடுத்து மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார்கள்.
இதற்கு நடுவே மாணவியை அழைத்து வந்ததற்காக கயல்விழி சிகாமணியிடம் பணம் கேட்டிருக்கிறார். அதற்கு சிகாமணி, ராஜாமுஹம்மது, பிரபாகரன் உள்ளிட்ட மூவரும் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். இது குறித்தான ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
ஆகவே மாவட்ட கண்காணிப்பாளர் தங்கதுரை உத்தரவின் அடிப்படையில் இந்த கொடூர குற்ற செயலில் ஈடுபட்ட சிகாமணி, ராஜாமுகமது, பிரபாகரன் உள்ளிட்டோரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து இருக்கிறார்கள்.அதோடு, கயல்விழி மற்றும் அன்னலட்சுமி உள்ளிட்டோரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.