திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் 500 கிலோ குட்காவை காவல்துறையினர் வருமதன் செய்து அதனை கடத்தி வந்த 3 பேரை கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திற்கு காரில் குட்காவை கடத்தி வருவதாக நத்தம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் தங்கமுனியசாமி தலைமையிலான காவல்துறையினர் நத்தம் ஐயாப்பட்டி சாலையில் உள்ள தேங்காய் கிடங்கில் திடீரென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த சொகுசு கார் ஒன்றில் விற்பனைக்காக கடத்திவரப்பட்ட 500 கிலோ குட்கா இருப்பது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் சுக்காவை கடத்தி வந்த ஊராளி பட்டியைச் சேர்ந்த சுதாகர்(35),இசார்(34) மற்றும் ஜஹாங்கீர்(37) உள்ளிட்ட 3 பேரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிச்சென்ற ஓட்டுனர் ராகுல், நாகராஜ் உள்ளிட்ட இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.