fbpx

அட இது விடுற மாதிரி தெரியலப்பா 20ம் தேதி வரையில் 8 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

ஏற்கனவே கடந்த ஒரு வார காலமாக மாண்டஸ் புயலின் காரணமாக, பெய்த கனமழையால் தமிழகம் பல இன்னல்களை சந்தித்திருக்கிறது.இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை குறைந்து காணப்பட்டதால் பொதுமக்களிடையே ஒரு நிம்மதி தென்பட்டது. ஆனால் மீண்டும் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கிறது.

இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, இன்று முதல் வரும் 18ஆம் தேதி வரையில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல நாளை முதல் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி வரையில் தமிழக கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ததற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல வரும் 20ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அனேக இடங்களிலும் உள் தமிழக மாவட்டங்களில் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் போன்ற மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். லேசான மழையும் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் என்ற நிலையில் இருக்கும்.

தெற்கு அந்தமான் கடல் பகுதி, தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்றும்,நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கிலோமீட்டர் முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும். அதேபோல இடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீச கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டி இருக்கக்கூடிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் வரும் 18ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும். இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Next Post

மக்களே உஷார்..!! அந்த 8 மாவட்டங்கள்தான் டார்கெட்..!! வானிலை மையம் எச்சரிக்கை..!!

Fri Dec 16 , 2022
தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் 18ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 19ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக […]

You May Like