fbpx

தேர்வுக்கு பயந்து 10ம் வகுப்பு மாணவி தீ வைத்து தற்கொலை…..! சென்னையில் சோகம்….!

சென்னை மணலி பகுதி ஹரிகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்தவர் ரவிசங்கர். இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் ராஜஸ்ரீ(15) இவர் மணலி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் தான் தற்சமயம் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. கணித தேர்வுக்கு நன்றாக படிக்குமாறு மகளிடம் தெரிவித்து விட்டு பெற்றோர் வெளியே சென்று விட்டனர்.

ஆனால் கணிதப் பாடம் ராஜஸ்ரீக்கு சரியாக வராது என்று சொல்லப்படுகிறது. ஆகவே பெற்றோர் வீட்டில் இல்லாத சமயமாக பார்த்து அறையில் இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து உடல் மீது ஊற்றி அவர் தீ வைத்துக் கொளுத்திக் கொண்டார்.

அதோடு, தீயின் சூடு தாங்க முடியாமல் அலறிய மாணவியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அவசர ஊர்தியின் மூலமாக அனுப்பி வைத்தனர். அங்கே சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், அந்த மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயர்ந்தார் இந்த சம்பவம் தொடர்பாக மணலி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாணவியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றன.

Next Post

71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி..

Thu Apr 13 , 2023
புதிதாக அரசு பணிகளில் சேர உள்ள 71,000 பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பணி நியமன ஆணையை வழங்க உள்ளார். படித்த இளைஞர்கள், இளம் பெண்களுக்கு தங்களின் தகுதிக்கு ஏற்ப அரசு வேலைவாய்ப்புகளை அளிக்கும் நோக்கில் மத்திய அரசு ரோஜ்கர் மேளா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ரோசர் மேளா திட்டத்தின் கீழ் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கவும், […]
’ஒரே நாடு, ஒரே போலீஸ் சீருடை’...!! பிரதமர் மோடியின் புதிய திட்டம்..!!

You May Like