fbpx

12 வயது சிறுமி மூன்று மாத கர்ப்பம்!.. தந்தை உட்பட மூன்று பேர் கைது!.‌. கொடூர சம்பவம்..!

திண்டுக்கல் பாரதிபுரத்தில் வசித்து வரும் 47 வயது சமையல் தொழிலாளிக்கு மனைவி இறந்துவிட்டார். அதன்பின்னர் அவரது 12 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். மனைவி இறந்துவிட்டதால் மகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் வேலைக்கு செல்லும்போது அந்த பகுதியை சேர்ந்த நெசவுத்தொழிலாளி கண்ணன் என்பவரது வீட்டில் விட்டுச் செல்வது வழக்கம். கண்ணனுக்கு கல்யாணமாகி அவரது மனைவி இறந்துவிட்டார். மேலும் அவரது மகளும் மூளைவளர்ச்சி குறைபாடால் இறந்துவிட்டார்.

இந்நிலையில் தனது வீட்டுக்கு வந்த சிறுமிக்கு கண்ணனும் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுபற்றி தனது தந்தையிடம் சிறுமி கூறியுள்ளார். கண்ணன் எனக்கு நெருக்கமான நண்பர். நம் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்கிறார். எனவே இதுபற்றி யாரிடமும் கூற வேண்டாம் என மகளை மிரட்டி இருக்கிறார். இதனால் சிறுமி இந்த விசயத்தை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இந்த சமயத்தில் சிறுமியுடன் நெருக்கமாக கண்ணன் இருந்ததை அதேபகுதியை சேர்ந்த அரிசிக்கடை உரிமையாளர் முகமதுரபீக் (57) என்பவர் பார்த்துள்ளார்.

முகமதுரபீக்கும் இதுகுறித்து வெளியில் சொல்லிவிடுவேன் என மிரட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சூழ்நிலையில் சிறுமி மூன்று மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இது சிறுமிக்கு தெரியவில்லை. இதை அறிந்திராத சிறுமியின் தந்தையும், அவரது நண்பர்களும் சிறுமியை தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்தனர். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமி சாலையில் மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் சிறுமியை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது 12 வயது சிறுமி மூன்று மாத கர்ப்பிணியாக இருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து சமூகநலத்துறை அதிகாரிகள் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியின் தந்தை உட்பட மூன்று பேர் தன்னை பலாத்காரம் செய்ததாக கூறி அழுதுள்ளார். இதுகுறித்து நகர் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உலகநாதன், அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வனிதா ஆகியோர் வழக்குபதிவு செய்தனர். மேலும் சிறுமியை பலாத்காரம் செய்த தந்தை உட்பட மூன்று பேரை போச்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Baskar

Next Post

வரும் 19-ம் தேதி வரை இடி,மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்..

Thu Sep 15 , 2022
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வரும் 17, 18, 19 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ […]

You May Like