சங்கரன்கோவில் அருகே 16 வயது சிறுவன் காதலி இறந்த துக்கத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். மேலும் காதலியை எரித்த அதே இடத்தில் அவனையும் எரித்து விட சொல்லி வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட சிறுவனின் பெற்றோர், அவனது உடலை காவல்துறையினருக்கு தெரியாமல் எரிக்க முயன்றுள்ளனர். இது தெரிந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தற்கொலை செய்து கொண்ட சிறுவன் பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு, பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளான். இந்த சம்பவம் பற்றி தேவர் குளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்