அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இருக்கும் அரங்கோட்டை பகுதியில் மனவளர்ச்சி குன்றிய 16 வயது சிறுமி வசித்து வருகிறார். மனவளர்ச்சி குன்றிய இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்1படித்து வந்தார்.
இந்த நிலையில் , சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த முதியவர் சுந்தரம்(82) என்பவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு சிறுமியின் பெற்றோர், அதிர்ச்சி அடைந்தனர்
இதை தொடர்ந்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், காவல்துறையினர் முதியவர் சுந்தரம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.