கள்ளக்குறிச்சி நரிமேடு சேர்ந்தவர் வளர்மதி (35) இவருடைய கணவர் 10 மாதங்களுக்கு முன்னர் விபத்தில் மரணமடைந்தார். எத்தகைய சூழ்நிலையில் வளர்மதி தன்னுடைய 11 வயது மகன் தமிழரசன் மற்றும் 8 மாத கைக்குழந்தை கேசவன் உள்ளிட்டோருடன் தனியாக வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
அதோடு வளர்மதி ஆட்டோ மூலமாக காய்கறி வியாபாரமும் செய்து வந்தார் என்று சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில் வளர்மதி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது இதனால் அக்கம் பக்கத்தினர் சந்தேகத்தின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
ஆகவே கள்ளக்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அங்கே வளர்மதி மற்றும் அவருடைய 11 வயது மகன் தமிழரசன் 8 மாத கைக்குழந்தை கேசவன் போன்றோர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தனர்.
இதனை அடுத்து மூவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மோகன்ராஜ் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இத்தகைய நிலையில் விழுப்புரம் சரக டிஐஜி பொறுப்பு பகலவன் இன்று விசாரணை நடத்தி வருகின்றார்.